sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பி.ஜி.புதுார் அரசு பண்ணையில் விற்பனைக்கு தென்னங்கன்றுகள்

/

பி.ஜி.புதுார் அரசு பண்ணையில் விற்பனைக்கு தென்னங்கன்றுகள்

பி.ஜி.புதுார் அரசு பண்ணையில் விற்பனைக்கு தென்னங்கன்றுகள்

பி.ஜி.புதுார் அரசு பண்ணையில் விற்பனைக்கு தென்னங்கன்றுகள்


ADDED : மே 28, 2024 09:01 AM

Google News

ADDED : மே 28, 2024 09:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பி.ஜி.புதுார் அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

இது குறித்து, கிருஷ்ணகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பி.ஜி.புதுார் அரசு தென்னை நாற்றுப்பண்ணை, வேளாண் துறை கட்டுப்பாட்டிலிருந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தென்னை ஒட்டு மையத்தில் அரசம்பட்டி நெட்டை மற்றும் சவுகாட் ஆரஞ்ச் குட்டை தாய்மரங்கள் பராமரிக்கப்பட்டு ஒட்டு சேர்ப்பு பணிகள் நடக்கிறது.

நெட்டை மற்றும் குட்டை ஒட்டு ரகங்கள் விரை வில் பூ பூக்கும் தன்மை, வீரிய வளர்ச்சி, அதிக மகசூல், அதிக எடை, தரமான கொப்பரைகள் மற்றும் அதிக எண்ணெய் கொடுக்கக் கூடியது. பி.ஜி.புதுார் அரசு மாநில தென்னை நாற்றுப்பண்ணை யில், நெட்டை மற்றும் குட்டை ஒட்டு ரக தென்னங்கன்று ஒன்றின் விலை, 125 ரூபாய் மற்றும் நெட்டை ரக தென்னங்கன்று ஒன்றின் விலை, 60 ரூபாய் என்ற விலை யில், விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. தென்னங்கன்றுகள் வாங்க விரும்புவோர், மாநில தென்னை நாற்றுப்பண்ணை, பண்ணை மேலாளரை, 96009 66970 மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலரை, 97157 34458 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us