/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 40 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி புகார்
/
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 40 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி புகார்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 40 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி புகார்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 40 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி புகார்
ADDED : ஜூலை 30, 2024 03:08 AM
ஊத்தங்கரை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 40 பேரிடம், 1.50 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது, நடவடிக்கை கோரி, பாதிக்கப்-பட்டவர்கள் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, காட்டேரி பஞ்., அனுமன்தீர்த்தம் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த, 25ல் மக்க-ளுடன் முதல்வர் திட்டம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, போலீசா-ரிடம், காட்டேரி பகுதியை சார்ந்த பொதுமக்கள் மனு கொடுத்-தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த, ஊத்தங்கரை அரசு பஸ் டிப்போவில் கண்டக்டராக பணிபுரியும் குமரன், 55, மற்றும் அனுமன் தீர்த்தம் தனியார் பள்ளியில் பணிபுரியும் அவரது மகன் தமிழ்வாணன் ஆகியோர், அலுவலக உதவியாளர் பணி, லேப் டெக்னீஷியன் பணி உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளை வாங்கி தருவதாக கூறி கடந்த, 3 வருடங்களுக்கு முன், 40க்கும் மேற்பட்டோரிடம் தலா, 3 லட்சம் முதல், 6 லட்சம் ரூபாய் வரை என, 1.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். வேலை வாங்கி தராமல் காலம் கடத்தியதால், பணத்தை திருப்பி கேட்ட-போது, தர மறுத்து மிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தனர். மனு மீது நடவடிக்கை எடுக்காததால், நேற்று, ஊத்தங்கரை போலீசில், 40க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்தனர்.மனுவை விசாரித்த போலீசார், ஏற்கனவே இது சம்பந்தமான புகார், சென்னை குற்றப்பிரிவு அலுவலகத்தில் உள்ளது என்றும், எனவே, நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தி அனுப்பினர். இது குறித்து அரசு பஸ் கண்டக்டர் குமரனிடம் கேட்டபோது, ''அரசு வேலை வாங்கி தருவதாக வசூல் செய்த பணத்தை, சென்-னையிலுள்ள சிவக்குமார் என்பவரிடம் கொடுத்துள்ளேன். அதற்-கான ஆதாரமும் வைத்துள்ளேன்.சிவக்குமார் இறந்து விட்ட தகவல், கடந்த ஜனவரியில் தான் தெரிய வந்தது. சிவக்குமார் மீது சென்னை குற்றப்பிரிவு அலுவல-கத்தில் வழக்குப்பதிந்து உள்ளனர். அந்த வழக்கு முடிந்து, பணம் கொடுத்தால் தான், நான் திருப்பி தரமுடியும்,'' என்றார்.