/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2024 01:43 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, மாவட்ட கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசை கண்டித்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கூட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிந்து, பெருவாரியான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய கட்டுமான துறையை வளர்த்தெடுக்க எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைத்து அறிவித்துள்ள நிதி அமைச்சர், கட்டுமான பொருட்கள் அல்லது கட்டுமானத்திற்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்கவில்லை. கட்டுமானத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்வதற்கு, 28 சதவீத ஜி.எஸ்.டி., காரணம். எனவே, ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். அதேபோன்று கட்டுமான தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தை, 5 சதவீதமாக குறைத்து கட்டுமான தொழிலை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றக்கூடிய கட்டுமான துறைக்கு, மத்தியிலும், மாநிலத்திலும் தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை
எழுப்பினர்.