/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறனாளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் வெற்றி
/
மாற்றுத்திறனாளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் வெற்றி
மாற்றுத்திறனாளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் வெற்றி
மாற்றுத்திறனாளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் வெற்றி
ADDED : ஜூலை 17, 2024 02:34 AM
கிருஷ்ணகிரி;தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சென்னையில் கடந்த, 14ல் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடந்தன.
இதில், கிருஷ்ணகிரி அரசு உதவி பெறும் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் சர்வேஷ் கண்ணா, பழையபேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீராம் ஆகிய, 2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். 50 மீட்டர் முன்னோக்கிய நீச்சல் போட்டியில் ஸ்ரீராம், 2ம் பரிசும், 50 மீட்டர் பின்னோக்கிய நீச்சல் போட்டியில், சர்வேஷ் கண்ணா, 3ம் பரிசும் பெற்றனர்.
அவர்களை, மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி பாராட்டி ஊக்கப்படுத்தினார். பெற்றோர் மற்றும் பயிற்சியாளிடம் கருத்துக்களை கேட்டு நிவர்த்தி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலர் வடிவேலு, நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல்சர்தார், ஆசிரிய பயிற்றுனர் தமிழ் தென்றல், ராஜா, பயிற்சியாளர் மணி, சிறப்பு பயிற்றுனர்கள் அருண்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.