ADDED : ஜூலை 01, 2024 04:10 AM
கிருஷ்ணகிரி: மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டியில், 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மாவட்ட தேக்வாண்டோ கழகம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், 2024ம் ஆண்டிற்கான, 11வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோ விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் போட்டியை துவக்கி வைத்து பேசினார். தேக்வாண்டோ கழக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் துரைசாமி, இணை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தேக்வாண்டோ பயிற்றுனர் சங்கர் முன்னிலையில், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய, 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 150 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள், திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.