ADDED : மே 27, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் பல்வேறு குழுக்களாக யானைகள் முகாமிட்டு உள்ளன.
நேற்று முன்தினம் இரவு, தேன்கனிக்கோட்டை அடுத்த கண்டகானப்பள்ளி கிராமத்தில், மூன்று யானைகள் அப்பகுதியிலுள்ள சாலையில் முகாமிட்டன. நீண்ட நேரமாக சாலையில் நின்றிருந்த யானைகளால், அவ்வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
யானைகள் சாலையில் இருந்து செல்வதற்காக, முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காத்திருந்தனர். யானைகள் சென்ற பின், வாகன ஓட்டிகள், கடும் பீதியுடன் அங்கிருந்து சென்றனர்.