ADDED : ஏப் 19, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த மூகண்டகா கிராமத்தை சேர்ந்தவர் சித்தலிங்கப்பா, 64. இவர் நேற்று காலை, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.
அப்போது அருகே கல்குவாரி குட்டையில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானை சித்தலிங்கப்பாவை தாக்கி கொன்றது. தளி போலீசார் விசாரித்தனர்.
கடந்த 13ம் தேதி மாலை விவசாய நிலத்திற்கு சென்ற சூளகுண்டாவை சேர்ந்த விவசாயி நாராயணப்பா, 71, ஒற்றை யானை தாக்கி உயிரிழந்தார். இருவரையும் கொன்றது ஒரே யானை தான் என கிராம மக்கள் கூறுகின்றனர்.
உளிபெண்டா வனப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை எழுந்துள்ளது. உயிரிழந்த சித்தலிங்கப்பா குடும்பத்திற்கு ஜவளகிரி வனத்துறை சார்பில் முதற்கட்டமாக 50,000 ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

