/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சூளகிரியில் பால் கொள்முதல் விலையை குறைத்த தனியார் நிறுவனங்களால் விவசாயிகள் கவலை
/
சூளகிரியில் பால் கொள்முதல் விலையை குறைத்த தனியார் நிறுவனங்களால் விவசாயிகள் கவலை
சூளகிரியில் பால் கொள்முதல் விலையை குறைத்த தனியார் நிறுவனங்களால் விவசாயிகள் கவலை
சூளகிரியில் பால் கொள்முதல் விலையை குறைத்த தனியார் நிறுவனங்களால் விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 01, 2024 04:11 AM
ஓசூர்: சூளகிரி பகுதி விவசாயிகளிடம், கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை, தனியார் நிறுவனங்கள் குறைத்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக செய்கின்றனர். தமிழக அரசின் ஆவின் மட்டுமின்றி, தனியார் பால் பண்ணைகளுக்கும் விவசாயிகள் தினமும் பால் விற்பனை செய்கின்றனர். தனியார் நிறுவனங்கள் கடந்த, 2 மாதங்களுக்கு முன் வரை, சூளகிரி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் ஒரு லிட்டர் பாலை, 42 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கின. தனியார் நிறுவனங்கள் சரியான நேரத்திற்கு பணத்தை வழங்குவதால், விவசாயிகள் ஆர்வமுடன் தனியார் நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக, 26 முதல், 30 ரூபாய் வரை மட்டுமே தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு விலை கொடுகின்றன. இதனால், தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கி வரும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, சூளகிரி பகுதி விவசாயிகள் கூறுகையில், 'விவசாயிகளிடம் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்வதை குறைத்து விட்டன.
ஆரம்ப காலத்தில், 42 ரூபாய் வரை விலை கொடுத்தார்கள். வெளிமாநில விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பால் கிடைப்பதால், சூளகிரி பகுதி விவசாயிகளிடம் பால் வாங்குவதை, தனியார் நிறுவனங்கள் குறைத்து விட்டன.
வாங்கும் பாலுக்கும் அதிகபட்சம், 30 ரூபாய் வரை மட்டுமே விலை கொடுக்கின்றன. மாவட்டம் முழுவதும், இதேநிலை தான் நீடிக்கிறது.
விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனங்கள் வாங்குவதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்றனர்.