/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காப்புக்காடுகளில் தீத்தடுப்பு ஒத்திகை
/
காப்புக்காடுகளில் தீத்தடுப்பு ஒத்திகை
ADDED : ஏப் 28, 2024 04:29 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகில் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒப்பதவாடி காப்புக்காடு மற்றும் நேரலக்கோட்டை காப்புக்காடு, கிருஷ்ணகிரி - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தொகரப்பள்ளி காப்புக்காடு என, பல்வேறு காப்புக்காடுகள் உள்ளன.
இங்கு மான், மயில், முயல், பாம்பு என பல்வேறு உயிரினங்கள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள கோடை வறட்சி யால் அனைத்து காப்புக்காடு
களிலுமே தண்ணீர் இன்றி, காடுகளில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்த சருகாகி வருகின்றன. எனவே, காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கவும், அவ்வாறு தீ விபத்து ஏற்பட்டால், அதை உடனடியாக அணைக்கவும், அதில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வனவர் வெங்கடாசலம் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒப்பதவாடி காப்புக்காடு பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர்.
அப்போது, காப்புக்காடு உள்ள பகுதியில் செல்வோர் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.
அப்படி திடீர் என தீப்பிடித்தால், தாமதமின்றி பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு 101 மற்றும் 112 ஆகிய, இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், தீ விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு முதலுதவி செய்து, அவர்களை எவ்வாறு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்து, செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர்.

