ADDED : ஜூன் 28, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், சூளகிரி எஸ்.ஐ., சையது பாஷா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வி.ஐ.பி., நகரில் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு பட்டாசு கடையில் உரிய ஆவணங்கள் உள்ளதா என விசாரித்துள்ளனர்.
இதில், ஆவணங்கள் இல்லாமல், பட்டாசு கடை நடத்தியது தெரிந்தது. இதையடுத்து பட்டாசு கடை உரிமையாளரான காமன்தொட்டி பிரித்விராஜ், 35, என்பவரை கைது செய்த போலீசார், கடையிலிருந்து, 2,750 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.