ADDED : மார் 07, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த காளிக்குட்டையைச் சேர்ந்தவர் மாதேஷ், 29; கூலித்தொழிலாளி. இவருக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை, கடந்த 3ல் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்தில் உடன்பாடில்லாததால், மாதேசுடன் செல்ல மாட்டேன் எனக்கூறிய மாணவியை, உறவினர்கள் குண்டுக்கட்டாக துாக்கிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் பரவின. தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், மாதேஷ், அவரது சகோதரர் மல்லேஷ், 35, மாணவியின் தாய் நாகம்மா, 29, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
நாகம்மாவின் அண்ணி முனியம்மாள், 32, என்பவரையும் கைது செய்துள்ளனர்.