/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம்
/
இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம்
ADDED : மே 10, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில், அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும், 2ம் ஆண்டாக இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் கடந்த மாதம், 24 முதல் வரும், 19 வரை, காலை மற்றும் மாலையில் நடந்து வருகிறது.இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தினமும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமையில், உடற்கல்வி இயக்குனர் சிதம்பரம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இப்பயிற்சியை அளிக்கின்றனர்.