/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
/
அரசு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
ADDED : செப் 01, 2024 04:51 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடு-நிலைப்பள்ளியில் (தமிழ், ஆங்கில வழி) பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை வகித்தார். ஓசூர் வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார், கவுன்சி-லர்கள் மோசின்தாஜ், தேவி மாதேஷ் ஆகியோர் பேசினர். கூட்-டத்தில், பள்ளி மேலாண்மை குழு தலைவியாக மாலினி, துணைத்தலைவியாக நதியா மற்றும் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் பேசிய, தலைமையாசிரியர் பத்மாவதி, புதிய வகுப்-பறை கட்டட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மின்-தடை நேரங்களில் போதிய தண்ணீரின்றி மாணவ, மாணவியர் அவதியடைகின்றனர். எனவே, புதிய தரைமட்ட தொட்டி கட்டி தர வேண்டும். பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் போட வேண்டும். கூடுதலாக ஒரு துாய்மை பணியாளரை, மாநகராட்சி நிர்வாகம் நியமிக்க, கவுன்சிலர்களிடம் கேட்டுக் கொண்டார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சாமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்