ADDED : நவ 04, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:ஓசூர்
ஹட்கோ ஸ்டேஷன் எஸ்.ஐ., அறிவழகன் மற்றும் போலீசார், கதிரேப்பள்ளி
சர்வீஸ் சாலையில் உள்ள சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு பாலத்தில், நேற்று
முன்தினம் வாகன சோதனை செய்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர்
லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, தமிழக அரசின் தடையை மீறி,
சூளகிரியிலிருந்து பெங்களூருக்கு, 7 யூனிட் எம்.சாண்ட் கடத்தி
செல்வது தெரிந்தது.இதனால், எம்.சாண்டுடன் லாரியை பறிமுதல் செய்த
போலீசார், லாரி டிரைவரான, கிருஷ்ணகிரி அருகே ஆண்டியூரை சேர்ந்த
ஆனந்தகுமார், 35, என்பவரை கைது செய்தனர். மேலும், உரிமையாளரான,
தர்மபுரி மாவட்டம், மல்லாபுரத்தை சேர்ந்த முனியப்பா என்பவரை தேடி
வருகின்றனர்.
