/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.வி.எஸ்., குழும எம்.டி.,க்கு 'மனிதநேய பண்பாளர்' விருது
/
கே.வி.எஸ்., குழும எம்.டி.,க்கு 'மனிதநேய பண்பாளர்' விருது
கே.வி.எஸ்., குழும எம்.டி.,க்கு 'மனிதநேய பண்பாளர்' விருது
கே.வி.எஸ்., குழும எம்.டி.,க்கு 'மனிதநேய பண்பாளர்' விருது
ADDED : செப் 03, 2024 04:45 AM
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, காவேரிப்பட்டணம் வட்-டார கிளை சார்பில், ஆசிரியர்கள் தினவிழா நடந்தது. வட்டார தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் லட்சு-மணன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் முன்-னிலை வகித்தார்.
விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் சபீக்ஜான், தாசூன், வட்-டார வள மைய மேற்பார்வையாளர் குமார், வட்டார கல்வி கண்-காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் பேசினர். கே.வி.எஸ்., குழுமங்களின் நிர்வாக இயக்குனரும், தொழிலதிபருமான சீனி-வாசன் பேசினார். தொடர்ந்து, நடப்பாண்டில் ஓய்வு பெறவி-ருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி, சுகிசிவம் பேசுகையில், ''எளிமையான ஒரு விஷயத்தை செய்வது என்பது எல்லோராலும் முடியும். ஆனால், கடினமான ஒரு விஷயத்தை எடுத்து, அதில் சாதிப்பது தான் சாதனையாளர். அந்த சாதனையா-ளர்கள் தான் ஆசிரியர்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் மாண-வர்களை நல்வழிப்படுத்துவது என்பது, ஆசிரியர்களுக்கு மிகவும் சவாலான விஷயமாகும்,'' என்றார்.தொடர்ந்து பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி வரும் தொழி-லதிபர் கே.வி.எஸ்., சீனிவாசனுக்கு, 'மனிதநேய பண்பாளர்' விருதை சுகிசிவம் வழங்கினார்.