/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களால் தான் சுகாதாரம்'
/
'துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களால் தான் சுகாதாரம்'
'துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களால் தான் சுகாதாரம்'
'துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களால் தான் சுகாதாரம்'
ADDED : மே 02, 2024 11:18 AM
கிருஷ்ணகிரி: மே, 1ம் தேதி, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி நகராட்சி துாய்மை பணியாளர்கள், அலுவலர்களுடன் இணைந்து அவர்களது இல்லத்தில் தொழிலாளர் தினவிழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர செயலாளர் நவாப் முன்னிலை வகித்தார்.
இதில், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. ஆனால், அதற்கான துாய்மை பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர்.
ஆனால், அதை பொருட்படுத்தாமல், அதிக உழைப்பை கொடுத்து நம் ஊழியர்கள், நகரை துாய்மையாக வைத்துள்ளார்கள். துாய்மை பணியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் இல்லையென்றால், நகராட்சி மட்டுமல்ல, எந்த பஞ்.,களிலும் இரு நாட்கள் கூட சுகாதாரம் இருக்காது. அதனால், தொழிலாளர் தினத்தில், அவர்களை எண்ணி நாம் பெருமை பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து துாய்மை பணியாளர்கள், துப்புரவு, சுகாதார அலுவலர்களுடன் இணைந்து கேக் வெட்டியும், துாய்மை பணியாளர்களுக்கு சால்வையும் அணிவிக்கப்பட்டது. நகராட்சியில் பணிபுரியும், 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள் புவனேஸ்வரி, தேன்மொழி, மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

