/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க.,வினர் தண்ணீர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க.,வினர் தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 28, 2024 04:28 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் பஸ் ஸ்டாண்டில்
அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், கூழ் மற்றும் இளநீர், தர்பூசணி, வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜேந்திரன், காரகுப்பம் பஞ்., தலைவர் கோவிந்தராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் டி.சி.ஆர்., சர்க்கிள் அருகில் மற்றும் மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் என, 2 இடங்களில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு கன்னியப்பன், மேற்கு சோக்காடி ராஜன் தலைமை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், இளநீர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார்.மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், உட்பட பலர் பங்கேற்றனர்.
* போச்சம்பள்ளியில், நேற்று காலை, அ.தி.மு.க., சார்பில், 4 ரோடு சந்திப்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. முன்னான் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

