/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., இளைஞரணி தண்ணீர் பந்தல் திறப்பு
/
தி.மு.க., இளைஞரணி தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : மே 06, 2024 02:04 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை சாலை ஜங்சன் அருகே கிழக்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், நேற்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர் நவாப் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேட்டியம்பட்டி மகேந்திரன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி மற்றும் பழங்களை வழங்கினார்.
இதில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சங்கர், சத்தியமூர்த்தி, ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.