/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிந்தைய மயக்க சிகிச்சை பிரிவு துவக்கம்
/
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிந்தைய மயக்க சிகிச்சை பிரிவு துவக்கம்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிந்தைய மயக்க சிகிச்சை பிரிவு துவக்கம்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிந்தைய மயக்க சிகிச்சை பிரிவு துவக்கம்
ADDED : மே 30, 2024 12:52 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அதிநவீன வசதிகளுடன் கூடிய பிந்தைய மயக்க சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியிலுள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரி, மயக்கவியல் துறை சார்பில், அதிநவீன வசதிகளுடன் கூடிய பிந்தைய மயக்க சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் பூவதி, சிகிச்சை பிரிவை துவக்கி வைத்து பேசியதாவது: கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், மிகப்பெரிய மருத்துவமனைகளில் மட்டுமுள்ள பிந்தைய மயக்க சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இது, பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள், அறுவை சிகிச்சை முடிந்து கண்காணிப்பில் வைக்கப்படுவதற்காக திறக்கப்பட்ட பிரிவாகும். அதன்படி அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகளுக்கு அடுத்த, 6 மணி நேரம், அவர்களது ரத்த அழுத்தம், உடல் சீர்நிலை குறித்து அனைத்தும் நவீன கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு, வார்டுகளுக்கு அனுப்பப்படுவர். இப்பிரிவில், 10 படுக்கைகள் வென்டிலேட்டர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் துவங்கப்பட்ட இந்த புதிய சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை செய்பவர்கள் விரைவில் குணமடைந்து உடல்நிலையை சீராக்குவதற்கு உதவும். இவ்வாறு, அவர் பேசினார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், டாக்டர்கள் மது, செல்வராஜ் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.