/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் தொழிற்சாலைகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி
/
ஓசூரில் தொழிற்சாலைகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி
ADDED : ஜூன் 30, 2024 03:58 AM
ஓசூர்: ஓசூர், காவேரி மருத்துவமனை மற்றும் ஓசூர் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் சார்பில், தொழிற்சாலைகளுக்கு இடையே நட்புறவை வளர்க்கவும், தொழிலாளர்களின் விளையாட்டு திறமையை வெளிக்கொணரும் வகையிலும், 5ம் ஆண்டு ஓசூர் கிரிக்கெட் லீக் போட்டிகள், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது.
ஓசூர் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் சுந்தரய்யா, பொருளாளர் அரவிந்த் ஆதி, காவேரி மருத்துவமனை குழும செயல் இயக்குனர் விஜயபாஸ்கரன் ஆகியோர், குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தனர். ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள, 32 தொழிற்சாலை அணிகள் பங்கேற்றுள்ளன. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடத்தப்படும் போட்டிகள், 4 வாரத்தில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய், 2ம் பரிசாக, 75,000 ரூபாய், 3ம் பரிசாக, 50,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.