ADDED : செப் 22, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
பாகலுார்: தமிழகத்திலிருந்து, அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல, தமிழக அரசு தற்-காலிக தடை விதித்துள்ளது. அதையும் மீறி, கனிம கடத்தல் தொடர்கிறது. இச்சூழலில், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே, தேவீரப்பள்ளி சாட்-டிலைட் டவுன் ரிங்ரோடு அருகே, நேற்று முன்-தினம் பாலிகானப்பள்ளி வி.ஏ.ஓ., பிரபாகரன் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனை செய்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில், 6 யூனிட் எம்.சாண்ட் மற்றும் மற்றொரு மினி டிப்பர் லாரியில், 2 யூனிட் எம்.சாண்ட் ஆகியவற்றை, பாகலுாரிலிருந்து கர்நாடகாவிற்கு கடத்தி செல்-வது தெரிந்தது. அதனால், லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாகலுார் ஸ்டேஷனில் ஒப்-படைத்தனர். வி.ஏ.ஓ., பிரபாகரன் புகார் படி, லாரி-களின் டிரைவர்கள், உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
