/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாலிபரிடம் வழிப்பறி 2 பேருக்கு காப்பு
/
வாலிபரிடம் வழிப்பறி 2 பேருக்கு காப்பு
ADDED : ஜூலை 02, 2024 10:51 AM
ஓசூர்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கூத்தப்பாடியை சேர்ந்தவர் சாமிநாதன், 28; தளி அருகே உப்பாரப்பள்ளியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். கடந்த, 29 இரவு, 9:45 மணிக்கு, அப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் அருகே நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக பல்சர் பைக்கில் வந்த இருவர் வழிமறித்து, அவரது சட்டை பாக்கெட்டிலிருந்த, பணத்தை பறித்து சென்றனர். சாமிநாதன் புகார் படி, தளி போலீசார் விசாரித்தனர். இதில், தேன்கனிக்கோட்டை அருகே நேரலட்டியை சேர்ந்த ஜெகதீஷ், 25, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல்லை சேர்ந்த ஸ்ரீகாந்த், 23, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.