sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

திருமணம் செய்வதற்கு இளம்பெண் கடத்தல்

/

திருமணம் செய்வதற்கு இளம்பெண் கடத்தல்

திருமணம் செய்வதற்கு இளம்பெண் கடத்தல்

திருமணம் செய்வதற்கு இளம்பெண் கடத்தல்


ADDED : ஜூலை 22, 2024 12:24 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 12:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா, 50; இவர் மகள் ஹேமாவதி, 19; நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். அவரது தந்தை முத்தப்பா, சூளகிரி போலீசில் கொடுத்த புகாரில், கெலமங்கலத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் மகளை கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் கடத்தல் வழக்குப்பதிந்து, ஹேமாவதியை தேடி வருகின்றனர்.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: ஹிந்து கோவில்களை விட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கலைகோபி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ஹிந்து கோவில்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்தும், ஹிந்து சமய அறநிலையத்துறை, கோவில்களை விட்டு வெளியேற வேண்டும். கோவில்களை சீரழிக்க வேண்டாம். ஹிந்து கோவில்கள், ஹிந்துக்களுக்கே என்பதை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லையெனக்கூறி, போலீசார், 13 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஓசூர் ராம்நகரிலும், தாலுகா அலுவலக சாலையிலுள்ள கிருஷ்ணன் கோவில் முன்பும், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, இந்து முன்னணி சேலம் கோட்ட பொறுப்பாளர் உமேஷ் உட்பட, 27 பேரை போலீசார் கைது செய்து, மண்டபத்தில் அடைத்தனர். பின் மாலையில் விடுவித்தனர்.

பால் பவுடர் திருடிய நிறுவன ஊழியர் கைது

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் கோவிந்த செட்டி தெருவை சேர்ந்தவர் சரவணன், 52; இவர் பால் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில், பையூர் அருகே உள்ள மாணிக்கனுாரை சேர்ந்த சி.சரவணன், 42, என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த, 19 அதிகாலை, 3:00 மணிக்கு, நிறுவனத்திலிருந்த, 500 கிலோ பால் பவுடர்கள் அடங்கிய, 20 கோணிப்பைகளை நிறுவன ஆட்டோவில் திருடிச்சென்றார். இது குறித்து உரிமையாளர் சரவணன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஊழியர் சரவணனை கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பால் பவுடர்கள், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us