/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 635 கன அடியாக சரிவு
/
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 635 கன அடியாக சரிவு
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 635 கன அடியாக சரிவு
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 635 கன அடியாக சரிவு
ADDED : ஜூன் 09, 2024 04:29 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 635 கன அடியாக சரிந்தது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 905 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 635 கன அடியாக குறைந்தது. அணையின் மொத்த கொள்ளளவான, 52 அடியில், 44.65 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றிலும், வாய்க்காலிலும் வினாடிக்கு, 111 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், அணைக்கு வரும் நீர் முழுவதும் சேமிக்கப்படுவதாகவும் நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை
நிலவியது.