/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
132 நாட்களாக 50 அடியை எட்டாத கே.ஆர்.பி., அணை நீர்மட்டம்
/
132 நாட்களாக 50 அடியை எட்டாத கே.ஆர்.பி., அணை நீர்மட்டம்
132 நாட்களாக 50 அடியை எட்டாத கே.ஆர்.பி., அணை நீர்மட்டம்
132 நாட்களாக 50 அடியை எட்டாத கே.ஆர்.பி., அணை நீர்மட்டம்
ADDED : ஜூன் 18, 2024 11:41 AM
கிருஷ்ணகிரி: பருவமழை பொய்த்து போனதால் கடந்த, 132 நாட்களாக கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 50 அடியை எட்டவில்லை.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையை கட்டி முடித்து, 66 ஆண்டுகளில் கடந்த, 2017ல் அணையின் பிரதான ஒரு ஷட்டர் உடைந்ததால், முதல் முறையாக இந்த அணை, அந்த ஆண்டில் நிரம்பவில்லை. புதிய ஷட்டர் மாற்றும் பணியால் அடுத்த, 3 ஆண்டுகளும் அணை நிரம்பவில்லை. ஆனால், 63 ஆண்டுகளும், இந்த அணை நிரம்பி, எப்போதும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் ஓடியதால், அணையை மாவட்ட மக்கள் வரப்பிரசாதமாக கருதி வந்தனர்.
கடந்தாண்டின் இறுதியில், 4 மாதங்கள் பரவலாக மழை பெய்ததால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்தது. அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன், 4 முதல் பிப்., 6 வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது. பின்னர் மழையின்றி, பிப்., 7ல், 248 நாட்களுக்கு பிறகு, அணை நீர்மட்டம், 49.95 அடியாக சரிந்தது. அதன்பிறகு பருவமழை பொய்த்து போனதால், அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது.
இதனால் பிப்., 7 முதல் நேற்று வரை, 132 நாட்களாக அணை நீர்மட்டம், 50 அடியை எட்டவில்லை. நேற்று அணைக்கு வினாடிக்கு, 328 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. வலது மற்றும் இடதுபுற வாய்க்காலில், 12 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 46.85 அடியாக நீர்மட்டம் இருந்தது.