/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
51 அடியை எட்டியது கே.ஆர்.பி., அணை நீர்மட்டம்
/
51 அடியை எட்டியது கே.ஆர்.பி., அணை நீர்மட்டம்
ADDED : ஜூலை 26, 2024 09:10 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது லேசான மழை பெய்ததாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த, 23 நாட்களாக தண்ணீர் திறப்பாலும் கடந்த, 15ல் கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 50 அடியை எட்டியது. தொடர்ந்து ஒரே சீராக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், 11 நாட்களுக்கு பிறகு நேற்று, 51 அடியை எட்டியது.
அணைக்கு வினாடிக்கு, 250 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இடது மற்றும் வலது புற வாய்க்காலில், 185 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம், 51 அடியை எட்டியுள்ளதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட உள்ளது. அணைக்கு நீர்வரத்து, 500 கன அடியாக அதிகரித்தால், ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.