/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
/
தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 03, 2024 04:42 AM
கிருஷ்ணகிரி: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அளவில், 19 வயது பிரிவு மணவர்களுக்கு கால்பந்து போட்டிகளும், 25 வயது பிரிவு மாணவியருக்கு ஹாக்கி போட்டி-களும், 45 வயது பிரிவில், ஒரு கி.மீ., நடக்கும் போட்டியும், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் புளியம்-பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில், மாவட்டம் முழுவதுமிருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டிகளை முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் வேலு துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் வெற்றி பெற்றவர்க-ளுக்கு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.