ADDED : மார் 09, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலீசாரை தாக்கியவர் கைது
கிருஷ்ணகிரி:பர்கூர் பஸ் ஸ்டாணட் அருகில் எஸ்.ஐ., திருவேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அங்கு டூவீலரில் நின்றபடி பர்கூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த வல்லரசு, 26, என்பவர், அவ்வழியே சென்ற பெண்களிடமும், பஸ் ஸ்டாண்டில் நின்ற பெண்களிடமும் பைக்கின் ஆரக்சிலேட்டரை முறுக்கியும், அவர்களை மோதுவது போல் சென்று நிறுத்துவதுமாக இருந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், விசாரித்ததில் அவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. அவரை அங்கிருந்து செல்வ கூறியவுடன், மதுபோதையில் இருந்த வல்லரசு, போலீசாரை சரமாரியாக தாக்கினார். போலீசார், அவரை கைது செய்து, பர்கூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.