ADDED : ஜூலை 30, 2024 03:07 AM
போச்சம்பள்ளி அடுத்த, சந்துாரிலுள்ள மாங்கனி மலை வேல்மு-ருகன், வள்ளி, தெய்வசேனா சமேத கோவிலில், ஆடி கிருத்திகை திருவிழா நேற்று நடந்தது. காலை மாரியம்மன் கோவிலில் வீர-பத்திரசுவாமி பக்தர்களின் சேவ ஆட்ட நிகழ்ச்சியும், பக்தர்களின் தலை மீதும், காளை மாட்டின் தலை மீதும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.அதேபோல் மாக்கிரெட்டிக்கொட்டாய் சரவணா குழுவினரால் பக்-தர்களுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், பால், பன்னீர், புஷ்ப காவடி உள்ளிட்ட காவடிகளை ஏந்தி, ஆயிரக்க-ணக்கான பக்தர்கள் மாங்கனி மலை வேல்முருகனுக்கு வேண்டு-தலை நிறைவேற்றினர்.
நேர்த்திக்கடன்வேப்பனஹள்ளி அடுத்து கடவரப்பள்ளி காரகுப்பம் பச்சை மலை முருகன் கோவிலில் நேற்று காலை, 6:00 மணி முதல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, அலகு குத்துதல், கிரேனில் தொங்குதல், கத்தி குத்துதல், தேர் இழுத்தல், எழுமிச்சை பழம் குத்திக் கொண்டு கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பர்கூர் பாலமுருகன் கோவிலில் நேற்று காலை சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கொண்டப்பநாயனப்-பள்ளி பக்தர் சுந்தரேசன் மார்பின் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, முதுகில் அலகு குத்திக்கொண்டு, 50 அடி துாரத்திற்கு அந்தரத்தில் பறந்து சென்று பாலமுருகனுக்கு பூஜை செய்தார். ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு, கிரேனில் அந்தரத்தில் தொங்கி-யவாறு சென்று வேண்டுதல் நிறைவேற்றினர்.
* ஊத்தங்கரை முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையில் சுவாமி திரு-வீதி உலாவும் நடந்தது.* கெலமங்கலம் அருகே சின்னட்டியிலுள்ள சின்னபழனி பாலமு-ருகன் கோவிலில், நேற்று சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்-பட்டது. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்-கடன் செலுத்தினர். ஓசூர் பெரியார் நகர் பாலமுருகன் கோவிலில், சுவாமி திருவீதி உலா நடந்தது.

