/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : மே 30, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நமிலேரி கிராமத்தில், பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் திருவிழா நேற்று நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. பெண்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பச்சியம்மன், முத்துராய சுவாமி உற்சவ மூர்த்திகளை, பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். அம்மன் மற்றும் முனியப்பனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், ஆடு பலியிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.