/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூட்டணிக்காக சமரசம் செய்து கொள்ள மாட்டோம் ம.தி.மு.க., மாநில நிர்வாகி தகவல்
/
கூட்டணிக்காக சமரசம் செய்து கொள்ள மாட்டோம் ம.தி.மு.க., மாநில நிர்வாகி தகவல்
கூட்டணிக்காக சமரசம் செய்து கொள்ள மாட்டோம் ம.தி.மு.க., மாநில நிர்வாகி தகவல்
கூட்டணிக்காக சமரசம் செய்து கொள்ள மாட்டோம் ம.தி.மு.க., மாநில நிர்வாகி தகவல்
ADDED : ஜூலை 29, 2024 02:02 AM
ஓசூர்: ''கூட்டணிக்காக சமரசம் செய்து கொள்ள மாட்டோம்,'' என, ம.தி.மு.க., துணை பொது செயலாளர் ரோஹையா ஷேக் முகம்-மது கூறினார்.
ம.தி.மு.க., சார்பில், 31 இடங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொடியேற்று விழா நடந்தது. இதில் பங்கேற்க ஓசூர் வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டை நிதீஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகி-யோருக்கான பட்ஜெட்டாகத்தான் பார்க்கிறோம். இப்போது வரை எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் கிடையாது. கூட்டணிக்காக நாங்கள் சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்.
கடந்த, 32 ஆண்டுகளில், ம.தி.மு.க., பல தேர்தல்களை சந்தித்-துள்ளது. இம்முறைதான் தனி சின்னமான தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு, 3.20 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், துரை வைகோ திருச்சி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
தவறு எங்கு நடந்தாலும் சுட்டிக்காட்ட தயாராக இருக்கிறோம். ம.தி.மு.க., சமரசம் செய்து கொள்ளும் கட்சி கிடையாது. ஸ்டெர்லைட் விவகாரத்தில், சின்ன சமரசம் செய்திருந்தால் கூட, எத்தனையோ லட்சம், கோடி, நாங்கள் பரிமாற்றம் செய்திருக்-கலாம்.
கடந்த, 2014 ல் வைகோவிற்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுக்-கப்பட்டது. ஆனால், ராஜபக்சே வந்தபோது வெளிநடப்பு செய்து எம்.பி., பதவியே வேண்டாம் என்றோம். ம.தி.மு.க.,வினர் பணம், அதிகாரத்துக்கு அப்பாற்பட்டவர்கள். பூரண மதுவிலக்கு, கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமென்பதே எங்களது நிலைப்-பாடு.
இவ்வாறு, அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயாலாளர் பாலமுரளி, நகர செய-லாளர் குமரேசன், மாநில மகளிரணி செயலாளர் மல்லிகா தயாளன், கொள்கை அணி விளக்க துணை செயலாளர் உடுமலை வேணு, தீர்மானக்குழு உறுப்பினர் இளங்கோ உட்பட பலர் உட-னிருந்தனர்.

