/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காங்., வேட்பாளர் வெற்றி;அமைச்சர் சக்கரபாணிக்கு எம்.எல்.ஏ.,க்கள் நன்றி

ADDED : ஜூன் 08, 2024 03:03 AM
ஓசூர்: -கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணியில், காங்., கட்சி சார்பில் போட்டியிட்ட கோபிநாத், 1 லட்சத்து, 92 ஆயிரத்து, 486 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு பாடுபட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணியை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., (ஓசூர்), மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., (பர்கூர்) ஆகியோர், சென்னையில் நேரில் சந்தித்து நன்றி கூறினர்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி பார்வையாளர் பார் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் ஆகியோர் உடன் இருந்தனர்.