/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு வலை
/
வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு வலை
ADDED : மே 10, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி;ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தத்தை சேர்ந்தவர் ரமேஷ், 26; அதே பகுதியில் மெடிக்கல்ஸ் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த, 7 இரவு, 9:30 மணியளவில் யமஹா பைக்கில் சென்றுள்ளார். அப்போது, வெப்பாலம்பட்டி அருகே ஊத்தங்கரை - அனுமந்தீர்த்தம் சாலையில் நின்ற, 4 பேர், ரமேசை தாக்கி, அவரிடமிருந்த மொபைல் போன், பைக்கை பறித்து சென்றனர்.இது குறித்து ரமேஷ், ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது, சிங்காரப்பேட்டை புதுாரை சேர்ந்த மோகன், மகனுார்பட்டி அலெக்ஸ், பாய், எக்கூர் சதீஷ் என்பது தெரிந்தது. அவர்கள் மீது வழக்குபதிந்த போலீசார், நால்வரையும் தேடி வருகின்றனர்.