ADDED : ஏப் 18, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகர் காமாட்சி அம்மன் கோவில் அருகே வசித்து
வந்தவர் நடராஜ், 74. இவர் நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு,
பாரதிதாசன் நகர் அருகே ரிங்ரோட்டில், சுசூகி ஆக்சஸ் மொபட்டில்
சென்றார்.
அவ்வழியாக வந்த கார், மொபட் மீது மோதியதில், நடராஜ்
படுகாயமடைந்து உயிரிழந்தார். ஓசூர் டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.

