/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திம்மாபுரத்தில் அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு விழா
/
திம்மாபுரத்தில் அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு விழா
திம்மாபுரத்தில் அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு விழா
திம்மாபுரத்தில் அர்ச்சனா சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு விழா
ADDED : ஜூன் 18, 2024 11:31 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரத்தில், சேலம் மெயின் ரோடு, அர்ச்சனா வளாகத்தில், அர்ச்சனா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில், 'அர்ச்சனா சி.பி.எஸ்.இ.,' பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தொடங்கப்பட்டுள்ள இப்பள்ளியில், திறமையான கல்வியாளர்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த அனுபவமிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளி திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு அர்ச்சனா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். தாளாளர் அர்ச்சனா ஜெயபால் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஸ்ரீகலா வரவேற்றார். நிர்வாக முதல்வர் முஸமில், பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார்.
விழாவில், நெடுங்கல் மற்றும் கிருஷ்ணகிரி விஷ்ணு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளரும், தொழிலதிபருமான அனுராதா பிரகாஷ், அர்ச்சனா பள்ளியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். விழாவில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிர்வாக அலுவலர் கலைவாணன் நன்றி கூறினார்.