/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவ, மாணவியருக்காக பயணியர் நிழற்கூடம் திறப்பு
/
மாணவ, மாணவியருக்காக பயணியர் நிழற்கூடம் திறப்பு
ADDED : ஜூலை 01, 2024 04:10 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரிங்ரோட்டிலுள்ள மாநகராட்சி, 22வது வார்டு நுழைவுவாயில் பகுதியில், தினமும் பள்ளி, கல்லுாரி செல்ல மாணவ, மாணவியர், கல்வி நிறுவனங்களின் பஸ்சிற்காக வெயிலில் காத்திருக்கின்றனர். மழைக்காலங்களில் மாணவ, மாணவியர் நனைந்தபடி காத்திருக்க வேண்டியுள்ளது. இதையடுத்து, 22வது வார்டு பொதுமக்கள் மற்றும் ஓசூர் சிப்காட் அரிமா சங்கம் ஆகியவை சார்பில், 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ரிங்ரோட்டின் ஓரத்தில், 22வது வார்டு நுழைவுவாயில் பகுதியில் புதிதாக நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது.
இதை, அப்பகுதி தி.மு.க., கவுன்சிலரும், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருமான மாதேஸ்வரன் நேற்று திறந்து, மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.