ADDED : மே 06, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி எல்லை க்கு உட்பட்ட, 7வது வார்டு, பழை ஒய வீட்டு வசதி வாரியம், 2வது கிராசில், கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், ஒப்பந்ததாரர் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக, இரவோடு இரவாக சாலையை அமை த்துள்ளார்.
அப்போது சாலையை சரியாக அமைக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அதன்படி, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபுவின் உத்தரவின்படி, சாலையை, 'ரீ பில்லிங்' செய்து, சீரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சாலையை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.