/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாரூர் சுற்று வட்டாரத்தில் நெல்நடவு பணிகள் தீவிரம்
/
பாரூர் சுற்று வட்டாரத்தில் நெல்நடவு பணிகள் தீவிரம்
பாரூர் சுற்று வட்டாரத்தில் நெல்நடவு பணிகள் தீவிரம்
பாரூர் சுற்று வட்டாரத்தில் நெல்நடவு பணிகள் தீவிரம்
ADDED : ஆக 05, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான வாய்க்கால்களில், முதல்போக பாசனத்திற்காக ஜூலை, 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் மூலம், கீழ்குப்பம், அரசம்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, பாரூர் மற்றும் விருப்பம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலுள்ள, 2,397 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாய பணி மேற்கொள்ள விவசாயிகள், நெல் நாற்று விட்டு பராமரித்து வந்தனர். தற்போது, மினி டிராக்டர் மூலம், உழவு பணி மேற்கொண்டு, நெல் நாற்றை சேகரித்து, நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.