/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வால்வு உடைந்து வெளியேறிய ஒகேனக்கல் குடிநீர் சாலையில் வீணாக ஓடியதால் மக்கள் அதிர்ச்சி

ADDED : ஆக 06, 2024 01:30 AM
ஓசூர், ஓசூரில், ஒகேனக்கல் குடிநீர் பல அடி துாரத்திற்கு பீய்ச்சி அடித்து, சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணானது.
ஓசூர் அருகே பாகலுார், பேரிகை, அத்திமுகம், கும்மளம் சுற்றுப்புற கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகத்திற்கு, சாலையோரம் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பாகலுார் சாலையிலுள்ள மாநகராட்சி அலுவலகம் அருகே, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கேட்வால்வு உள்ளது. அதில் நேற்று மதியம் கற்கள் அடைத்ததால் உடைப்பு ஏற்பட்டு, 12 அடி உயரத்திற்கும் மேல் ஒகேனக்கல் குடிநீர் பீய்ச்சி அடித்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறியது. பாகலுார் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீரை பார்த்து, வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், உடனடியாக தண்ணீர் வினியோகத்தை நிறுத்தினர். ஆனாலும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர், சாலையில் வீணாக ஓடியது.
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாநகராட்சியிலுள்ள, 45 ல், 15 வார்டுகளுக்கு மட்டுமே ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்ய முடிகிறது. கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை. இந்நிலையில், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் அருகே, கிராமங்களுக்கு செல்லும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வால்வில் உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது, மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.