/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையால் போச்சம்பள்ளி வாரச்சந்தை 'வெறிச்'
/
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையால் போச்சம்பள்ளி வாரச்சந்தை 'வெறிச்'
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையால் போச்சம்பள்ளி வாரச்சந்தை 'வெறிச்'
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையால் போச்சம்பள்ளி வாரச்சந்தை 'வெறிச்'
ADDED : ஆக 05, 2024 01:51 AM
போச்சம்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் மளிகை சாமான்கள், காய்கறிகள், தானிய வகைகள், விவசாய பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருட்கள், கால்நடைகள் போன்ற அன்றாட தேவைகளுக்கான அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும் வாரச்சந்தையாகும். நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கு என்பதால், பக்தர்கள் ஆறுகளுக்கு சென்று புனித நீராடி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஆடி அமாவாசை என்பதால், ஆறுகளில் புனித நீராடி தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் போச்சம்பள்ளி வாரச்சந்தை நேற்று மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை வாங்க, பொதுமக்கள் குறைந்த அளவே வந்திருந்ததால், வேறு வழியின்றி காய்கறிகள், தானிய வகைகள், ஆடு, மாடுகளை திரும்ப வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து காய்கறி வியாபாரி ராஜா கூறுகையில், ''தொடர்ந்து, 2வது நாளாக பண்டிகை நாட்களாக இருப்பதால், ஆங்காங்கு கிராமங்களில் உள்ள கடைகளிலேயே மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை, மக்கள் வாங்கி உபயோகப்படுத்தினர். இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு மக்கள் அதிகளவு வராததால், சந்தை வெறிச்சோடியது,'' என்றார்.