/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூலித்தொழிலாளி மீது போக்சோ வழக்கு
/
கூலித்தொழிலாளி மீது போக்சோ வழக்கு
ADDED : மே 01, 2024 02:33 AM
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, சென்னப்ப நாயக்கனுாரை சேர்ந்தவர்
பால்பாண்டி, 49; இவர் அதே பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வரும்
போது, 13 வயது சிறுமி பழக்கமானார். அவரிடம், தன்னை திருமணம் செய்து கொள்ள
கட்டாயப்படுத்தி உள்ளார். ஓராண்டிற்கு முன் அந்த ஊரில் நடந்த கோவில்
திருவிழாவில், பால்பாண்டி சிறுமியிடம் சேர்ந்து மொபைல்போனில், 'செல்பி'
எடுத்துக் கொண்டு, சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது போட்டோவை
காண்பித்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு
டிசம்பர், 29ல், சிறுமியின் வீட்டிற்கு வந்த பால்பாண்டி, சிறுமியை
ஆடையில்லாமல் போட்டோ எடுத்து வைத்திருப்பதாக கூறி, கட்டாயப்படுத்தி
அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு அழைத்து சென்று வலுகட்டாயமாக திருமணம்
செய்துள்ளார்.
சிறுமி புகார் படி, ஊத்தங்கரை மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி, பால்பாண்டி மீது, போக்சோவில் வழக்குப்
பதிந்து, அவரை தேடி வருகிறார்.