/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'
/
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'
ADDED : ஆக 17, 2024 04:09 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் கல்லாவி அருகே உள்ள கொல்லகொட்டாயை சேர்ந்த கோகுல், 20, படித்து வருகிறார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த, பிப்.,7ல், தன் ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு வருமாறு சிறுமியை அழைத்துள்ளார். ஊருக்கு வந்த சிறுமியிடம் திருமண ஆசைகாட்டி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி தற்போது, 7 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்படி, போக்சோ பிரிவில் வழக்குபதிந்து கோகுலை தேடி வருகின்றனர்.

