/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளிக்கு டவுன் பஸ் வசதி கேட்டு மாணவ, மாணவியர் சாலை மறியல்
/
பள்ளிக்கு டவுன் பஸ் வசதி கேட்டு மாணவ, மாணவியர் சாலை மறியல்
பள்ளிக்கு டவுன் பஸ் வசதி கேட்டு மாணவ, மாணவியர் சாலை மறியல்
பள்ளிக்கு டவுன் பஸ் வசதி கேட்டு மாணவ, மாணவியர் சாலை மறியல்
ADDED : ஜூலை 17, 2024 02:37 AM
ஓசூர்;பேரிகை அருகே, பஸ் வசதி கேட்டு பள்ளி மாணவ, மாணவியர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த முதுகுறுக்கியில் அரசு உயர்நிலைப் பள்ளியும், பேரிகையில் அரசு மேல்நிலைப் பள்ளியும் இயங்குகிறது. இங்கு, ராமன்தொட்டியை சேர்ந்த, 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்கள், கிருஷ்ணகிரியிலிருந்து பேரிகை செல்லும் அரசு பஸ்சில் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அதை விட்டால், அவர்களால் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாது. அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் தினமும் மிக சிரமப்பட்டு பயணிக்கின்றனர்.
பள்ளி நேரத்திற்கு, கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும். அல்லது எஸ்.தட்டனப்பள்ளி வரை வந்து செல்லும் அரசு டவுன் பஸ்சை, ராமன்தொட்டி வரை இயக்கினால், பள்ளிக்கு எளிதாக செல்ல முடியும் என, மாணவ, மாணவியர் தெரிவித்து வந்தனர். ஆனால், அரசு போக்குவரத்துத்துறை கண்டுகொள்ளாத நிலையில், ஆத்திரமடைந்த மாணவ, மாணவியர், 50 க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, 9:00 மணிக்கு, ராமன்தொட்டி கேட் பகுதியில், கிருஷ்ணகிரியிலிருந்து பேரிகை சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து, சாலைமறியலில் ஈடுபட்டனர். சூளகிரி தாசில்தார் சக்திவேல், பேரிகை ஆர்.ஐ., குமரேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பஸ் இயக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து காலை, 10:10 மணிக்கு போராட்டத்தை மாணவ, மாணவியர் கைவிட்டு, பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.