/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பரிசு கூப்பன் ஆசை காட்டி ரூ.17.97 லட்சம் மோசடி
/
பரிசு கூப்பன் ஆசை காட்டி ரூ.17.97 லட்சம் மோசடி
ADDED : செப் 02, 2024 03:54 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை சேர்ந்தவர் ஷீலா, 38; டெய்லர். இவர், குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக, தன் கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஷீலாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'இணையதளத்தின் பரிசு கூப்பன் வந்துள்ளது. அதன் மதிப்பு, 15.51 லட்சம் ரூபாய். அதை பெற்றுக் கொள்ளலாம்' என்று கூறப்பட்டிருந்தது. ஷீலா, கடிதத்தில் இருந்த மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, ஜி.எஸ்.டி., மற்றும் நடைமுறை செலவுக்கான பணத்தை செலுத்தினால், பரிசு கூப்பன் பணத்துடன், அனுப்பிய பணத்தையும் சேர்த்து பெறலாம் என, கூறியுள்ளனர்.
நம்பிய ஷீலா, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளில், 17.97 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால், பரிசு கூப்பனுக்கான பணம் வரவில்லை.
சந்தேகமடைந்த ஷீலா, தான் பேசிய மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. ஷீலா புகார்படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.