/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 07, 2024 02:20 AM
கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட, 35 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், ஜெகதேவி சாலையில், பறக்கும்படை அலுவலர் அருண்ராஜ் தலைமையிலான அதிகாரிகள், வாகன தணிக்கை நடத்தினர்.
அவ்வழியே வங்கிகளுக்கு பணம் எடுத்து செல்லும் செக்யூர் ஏஜென்சி வாகனத்தை மடக்கினர். அதில், உரிய ஆவணமின்றி, 35 லட்சம் ரூபாய் இருந்தது தெரிந்தது. விசாரணையில் தர்மபுரி கனரா வங்கியிலிருந்து, ஜெகதேவி, ஊத்தங்கரை வங்கி கிளைகளுக்கு பணம் எடுத்து வரப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அலுவலர்கள், பர்கூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் தாசில்தார் திருமுருகனிடம் அப்பணத்தை ஒப்படைத்தனர்.

