ADDED : ஜூலை 30, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கனிம வள பிரிவு உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள் மகராஜகடை பஸ் ஸ்டாப் அருகில் ரோந்து சென்றனர்.அங்கு கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்த போது அதில், 6 கிரானைட் கற்கள் குப்பத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்த முயன்றது தெரிந்தது.இது தொடர்பாக அதிகாரி சரவணன் புகார் படி, மகராஜகடை போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.