/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் வழிந்தோடிய சாக்கடை கழிவுநீர் நிறுத்தம்
/
சாலையில் வழிந்தோடிய சாக்கடை கழிவுநீர் நிறுத்தம்
ADDED : ஜூலை 18, 2024 01:28 AM
ஓசூர்: சூளகிரியில், சாலையில் ஓடிய கழிவு நீர், 'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக நிறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியிலுள்ள பேரிகை சாலையில், முனீஸ்வரன் கோவில் அருகே, சாக்கடை கால்வாய் வசதி முறை-யாக இல்லை. சாலையோரம் மண்ணை தோண்டி கால்வாய் போல் அமைத்து, சூளகிரி நகர் பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் வெளியேற்ற வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கழிவு நீர் அடிக்கடி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்பட்டு வரு-வதாக, கடந்த, 15 ல், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி, படம் வெளியானது.
இதையடுத்து, சூளகிரி ஒன்றிய நிர்வாகம் மூலம், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, அப்பகுதியில் மண்ணை தோண்டி அமைத்துள்ள கால்வாயில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி, சாலைக்கு கழிவு நீர் வராத வகையில் தற்காலிகமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது சாலைக்கு தண்ணீர் வரவில்லை என்ற போதும், இது நிரந்தர தீர்வு இல்லை என்பதால், சாக்கடை கால்வாய் அமைத்து, கழிவு நீர் நிரந்தரமாக சாலைக்கு வராமல் இருக்க, நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.