/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவரிடம் பாலியல் அத்துமீறல்; டைலர் கைது
/
மாணவரிடம் பாலியல் அத்துமீறல்; டைலர் கைது
ADDED : ஜூன் 14, 2024 12:59 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அருகேயுள்ள பகுதியை சேர்ந்த, பிளஸ் 2 படித்து வரும், 18 வயது மாற்றுத்திறனாளி மாணவர், நேற்று முன்தினம் மதியம், காந்தி நகரிலுள்ள டைலர் கடைக்கு, தன் பழைய பேண்டை தைக்க சென்றார். கடை அருகே உட்கார்ந்த அவரின் அருகே வந்த டைலர் பார்த்திபன், 37, மாணவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதை வெளியே சொல்லக்கூடாது என, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மாணவர் தன் தாயிடம் நடந்த விபரத்தை கூறினார். உடனடியாக மாணவரை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மாணவர் புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார், டைலர் பார்த்திபனை கைது செய்து, தர்மபுரி கிளைச்சிறையில் அடைத்தனர். அவருக்கு மனைவி மற்றும்
2 குழந்தைகள் உள்ளனர்.