/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு 'சீல்'
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு 'சீல்'
ADDED : மே 10, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்;ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில், தளி உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் மற்றும் ஓசூர் எஸ்.ஐ., பிரபாகரன், செல்வராஜ், சண்முகம் உள்ளிட்ட போலீசார் குழுவினர், ஓசூர் பஜார், உழவர் சந்தை ரோடு, பாகலுார் ரோடு மற்றும் ஓசூர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.தடை செய்த, 1.50 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
எச்சரிக்கைக்கு பின்பும், தொடர்ந்து விற்ற, 3 கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர். மேலும் ஓசூர், கெலமங்கலம் வட்டாரத்தில் புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்ற, 56 கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறையினர், 'சீல்' வைத்துள்ளனர்.