ADDED : ஆக 14, 2024 02:08 AM
ஓசூர்: ஓசூரிலுள்ள மத்திய பட்டு இன வள மையத்தில், மத்திய பட்டு வாரிய பவள விழாவையொட்டி, பட்டு தொகுப்பு விழா கண்-காட்சி நேற்று நடந்தது. மைய இயக்குனர் நிஷிதா நாயக் கண்-காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை, பட்டு முத்திரை நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பட்டுப்புழு துறை, ஈரி பட்டுப்புழு வளர்ப்பு மையம் மற்றும் நெசவாளர்களின் பட்டு கைவினை பொருட்கள், கைத்தறி பொருட்கள், சேலைகள், மல்பெரி பட்டுப்புழு, அதன் வாழ்க்கை சுழற்சி, மண் முதல் பட்டு வரை பல்வேறு விதமான பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன, விற்பனையும் செய்யப்பட்டன.
ஓசூர், தளி, சேலம், மேட்டுப்பாளையம் பகுதி அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கண்காட்சியை பார்வையிட்டனர். அதில் வைத்தி-ருந்த பொருட்கள் குறித்து அவர்களுக்கு, மைய விஞ்ஞானி புனி-தவதி விளக்கமளித்தார். பட்டு இன வள மையத்தை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.
